சிறப்பு வழிபாடுகள்

நித்திய கட்டளை

நித்திய கட்டளை பூஜை முறைக்கு ரூ. 5000/- நன்கொடையாகப் பெறப்படுகிறது. பக்தர்கள் வேண்டுகோளுக்கேற்ப அவர்கள் விரும்பும் நாளில் அர்ச்சனைகள் நடைபெறும். ஒருமுறை நித்திய கட்டளையாக ரூ.5000/- செலுத்தி வருடத்தில் ஒரு நாள் வாழும் வரை அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

செய்திகள்

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல்

திருக்கோயில் விபரம்

குடைவறை நரசிம்மர்: பக்தனின் நம்பிக்கையை உண்மையாக்கவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டவும் பறந்தோடிவந்த பகவான் ஸ்ரீ நரசிம்ம சுவாமி, இத்திருக்கோயிலில் இரணியனைக் கொன்ற தனது கூரிய நகங்களோடும், குருதிக்கறை படிந்த சிவந்த கரங்களோடும், ஒளிரும் கண்களோடும் தரிசனம் தருகின்றார்


அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில்

      குடைவறை நரசிம்மர்: பக்தனின் நம்பிக்கையை உண்மையாக்கவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டவும் பறந்தோடிவந்த பகவான் ஸ்ரீ நரசிம்ம சுவாமி, இத்திருக்கோயிலில் இரணியனைக் கொன்ற தனது கூரிய நகங்களோடும், குருதிக்கறை படிந்த சிவந்த கரங்களோடும், ஒளிரும் கண்களோடும் தரிசனம் தருகின்றார். ஜனகர், சனாதனர், சூரியர், சந்திரர், பிரம்ம தேவர் ஆகியோர் ஸ்ரீ நரசிம்ம சுவாமியைச் சுற்றியிருந்து அருள் செய்கின்றனர். குடைவறை மூர்த்தியாக இருப்பதனால் இவருக்குத் திருமஞ்சன சேவை நடைபெறுவதில்லை. மாற்றாக, உற்சவ மூர்த்திக்கே திருமஞ்சன சேவைகள் நடைபெறுகின்றன.

      ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரைத் தன் மடியில் அமர்த்தியிருப்பதால், பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். இந்திருக்கோயிலில், பகவான் ஸ்ரீமஹாலஷ்மி தாயாருக்குத் தனது திருமார்பில் இடமளித்து சிறப்பிக்கிறார். கிழக்கு நோக்கி தனது சன்னிதியில் ஸ்ரீ நாமகிரி தாயார் (அன்னை மஹாலக்ஷ்மி) மங்களமாய் அருளுகிறார். இத்திருக்கோயில் தாயாரை வணங்கும் பக்தர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

      ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குத் தனியே திருக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேய சுவாமி சாலகிராமத்தை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தெய்வ மூர்த்தி தனது கைகளில் ஜபமாலையும், இடுப்பில் வீர வாளையும் கொண்டு 18 அடிகள் உயர்ந்து நிற்கிறார்.

      ஒரு சமயம் ஸ்ரீஆஞ்சநேயருக்கு நேபாளத்திலுள்ள கந்தகி தீர்த்தத்தில் பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஒத்த சாலகிராமக் கல் ஒன்று கிடைத்தது. தனக்குக் கிடைத்த சாலகிராம விஷ்ணுவை எடுத்துக்கொண்டு ஆகாய மார்கமாகப் பறந்து வந்த ஆஞ்சநேயர் இந்த புனித நாமக்கல் பகுதியைக் கடக்க நேர்ந்தது. நீராட எண்ணிய ஸ்ரீ ஆஞ்சநேயர் சாலகிராமத்தை நிலத்தில் வைக்க மனமின்றி நின்றிருந்தார். அப்போது தேவி ஸ்ரீ மஹாலக்ஷ்மி தவம் செய்துகொண்டிருப்பதைக் கண்டார். தாயாரிடம் தவத்திற்கான காரணம் பற்றிக் கேட்டார். அதற்குத் தாயார், பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் நரசிம்ம ரூபத்தைக் காணவேண்டியே தான் தவம் இருப்பதாகக் கூறினார்.


திருவிழாக்கள்

  • தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)
  • ஆடி-18 (ஆகஸ்டு)
  • ஆடி பூரம் – ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை
  • ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டெம்பர்)
  • ஸ்ரீஅநுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நக்ஷத்ரம் அமாவாசை)

அன்னதானம்

அன்னதானத் திட்டத்தின் கீழ் தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. நூறு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் ரூ. 2,000/- நன்கொடையாக செலுத்தி, தாம் விரும்பும் ஒரு நாளில் அன்னதானம் வழங்கலாம். அன்னதான திட்டத்தின் கீழ், ரூ.20,000/- நன்கொடையாக செலுத்தி, ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் ஒரு நாள் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் அன்னதானம் வழங்கி அருள் பெறலாம்.

சுற்றுலாத்தலங்கள்

பிரபல சுற்றுலா மலை வாசஸ்தலங்களில் ஒன்றான ஏற்காடு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள சேர்வராயன் மலைச் சிகரங்களில் ஏற்காடு அமைந்துள்ளது. ஏற்காட்டு மலைப்பகுதிகளை சேர்வராயன் மலைகள் என்றும் கூறகின்றனர். கடல்மட்டத்திலிருந்து சுமார் 1515 மீட்டர்கள் (4970 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது. ஏற்காட்டின் உச்சிமுனை (5,326 அடிகள்) ...

தொடர்பு கொள்க

அருள்மிகு ஸ்ரீ நரசிம்ம சுவாமி அலுவலகம்

நிர்வாக அதிகாரி / செயல் அலுவலர்,

அருள்மிகு ஸ்ரீநரசிம்ம சுவாமி திருக்கோயில்,

நாமக்கல் - 637001,

தமிழ்நாடு,

இந்தியா.

தொலைபேசி : +4286 - 233999

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல். Copyright ©2014